புதுச்சேரி முதலமைச்சராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 9ஆம் தேதி அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து மருத்துவ சிகிச்சைகள் முழுவதும் முடிந்து வீடு திரும்பினார்.
அவர் காரில் புதுச்சேரிக்கு வந்தபோது தொண்டர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து அமர்க்களப்படுத்தினர்.
ரங்கசாமி குணமடைந்ததை அடுத்து, அவரது உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மேலும், புதுச்சேரி வந்த அவர் கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும், தொடர்ந்து சில மாத்திரைகளை உட்கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், எனக்கு கரோனா வராது’ - பாஜக எம்பி பிரக்யா சிங்