புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி, அம்மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார். விவசாயிகளின் போராட்டத்தை புதுச்சேரி அரசு ஆதரிக்கிறது. மத்திய அரசு உடனடியாக பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டி 3 சட்டங்களையும் வாபஸ் பெறவேண்டும். புயலால் புதுச்சேரியில் 400 கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இடைக்கால நிவாரணமாக 100 கோடி ரூபாய் வழங்க பிரதமரை வலியுறுத்தியுள்ளேன்.
இந்நிலையில், திங்கட்கிழமை புதுச்சேரிக்கு வருகை தரும் மத்திய குழுவிடம் வெள்ள பாதிப்புகளை தெரிவிப்போம். புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மறுத்து மின்துறை தனியார்மயமாக்கப்படும் என கூறியுள்ளது.