புதுச்சேரி ஆளும் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை சமமாக உள்ளதால், எதிர்க்கட்சிகள் நேற்று துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆளும் காங்கிரஸ் அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் இன்று 3 மணி அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து துணைநிலை ஆளுநரை மீண்டும் வலியுறுத்திய நிலையில், சிறிது நேரத்திலேயே முதல் அமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரை சந்தித்தார்.
துணைநிலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி -நடந்தது என்ன?
புதுச்சேரி :துணைநிலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி எதிர்க்கட்சிகள் கொடுத்த புகார் மனு மீது ஆளுநருடன் விவாதித்தாக தெரிவித்துள்ளார்.
puducherry cm meet governor
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், துணைநிலை ஆளுநரை நான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எதிர்க்கட்சிகள் மனு அளித்தது குறித்து துணைநிலை ஆளுநர் அழைத்தார். அதுகுறித்து நாங்கள் விவாதித்தோம் என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவை விற்கும் பாஜக - திருமா காட்டம்!