தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வருகை: மைதான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்!

புதுச்சேரிக்கு 17ஆம் தேதி ராகுல் காந்தி வருகை என்றும் மீனவர் சந்திப்பு மாணவர்களுடன் கலந்துரையாடல் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதால் முதலமைச்சர் நாராயணசாமி மைதான பணிகளை ஆய்வு செய்தார்.

புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வருகை: மைதான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்!
புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வருகை: மைதான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்!

By

Published : Feb 15, 2021, 3:53 PM IST

ராகுல்காந்தி வரும் 17ஆம் தேதி 12 மணியளவில் புதுச்சேரிக்கு வருகிறார். இதில் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில்
அரசியல் கலப்பு அல்லாமல் மீனவ சமுதாய மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் ஏ.எப்.டி மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், கடலூர்- புதுச்சேரி சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் ராகுல் காந்தி வருகைக்காக அமைக்கப்பட்டுவரும் விழா மேடையை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து காலதாமதம் செய்து மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார்.

தொடர்ந்து நாளை (பிப்.16) ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற கோரி முழு கடையடைப்பு அறிவித்து இருந்தோம், ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்ததால் தற்காலிகம் முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நிராகரித்து வருகிறது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை மாற்றுவதற்கான முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது. மத்திய அரசு புதுச்சேரியை வஞ்சித்து வருகிறது என மக்களுக்கு தெரிகிறது. புதுச்சேரி மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி” என்றார்.

இதையும் படிங்க...பொது மக்களிடம் கொள்ளை - எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details