புதுச்சேரி:முதலமைச்சர் ரங்கசாமி தினமும் காலை, மாலை வேளைகளில் கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோயில் அருகில் உள்ள மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவது வழக்கம். எந்த பரபரப்பு சூழ்நிலையிலும் டென்னிஸ் விளையாடுவதை முதலமைச்சர் தவிர்ப்பதில்லை.
இந்நிலையில் நேற்று(அக்.25) மாலை அவரது மருமகனான உள்துறை அமைச்சர் நமசிவாயத்தின், மகன் சிவஹரியுடன் அப்பா பைத்தியசாமி கோயில் அருகில் உள்ள மைதானத்தில் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தார்.