புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா உறுதி - முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா
21:23 May 09
புதுச்சேரி: முதலமைச்சராக பொறுப்பேற்ற இரண்டு நாளில் ரங்கசாமிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக ஆறு தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் (மே.7) அவர் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். பதவியேற்ற இரண்டே நாளில் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.