புதுச்சேரி: மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று(டிச. 11) கொண்டாடப்பட்டது. இதில், புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவிக்கு மரியாதை செலுத்திய புதுச்சேரி முதலமைச்சர்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Puducherry Chief Minister pays homage to Mahakavi Bharatiyar
இதைத்தொடர்ந்து அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டில், அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகாகவி பிறந்தநாள்: தமிழில் வாழ்த்தி சிறப்பித்த அமித் ஷா