பெரும்பான்மையை இழந்தது நாராயணசாமி அரசு! - தமிழிசை
09:47 February 22
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து, அவைத் தலைவர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்தான் முடிவு எடுக்க வேண்டும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய நாராயணசாமி, "புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. புதுச்சேரியில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.