புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி இன்று (நவ.06) நடைபெற்றது. மணிமேகலை அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணியில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்தப் பேரணியில் ஏராளமான மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, டெங்குவைக் கட்டுப்படுத்தவும், பருவ மழையை எதிர்கொள்ளவும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.