தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தைக்கு பெயர் சூட்டிய புதுச்சேரி முதலமைச்சர் - Puducherry assembly

சட்டப்பேரவை வளாகத்தில் தன்னை சந்தித்த தம்பதியினர் குழந்தைக்கு முதலமைச்சர் ரங்கசாமி பெயர் சூட்டினார்.

குழந்தைக்கு பெயர் சூட்டிய புதுச்சேரி முதலமைச்சர்
குழந்தைக்கு பெயர் சூட்டிய புதுச்சேரி முதலமைச்சர்

By

Published : Jul 5, 2021, 6:43 PM IST

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்-அமுதா தம்பதியருக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முதலமைச்சர் ரங்கசாமியால் பெயர் வைக்க விரும்பினர் அந்தத் தம்பதியினர்.

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அத்தம்பதியினர் குடும்பத்துடன் வந்திருந்தனர். முதலமைச்சர் சட்டபேரவை அலுவலகத்தில் வந்த பிறகு தம்பதியினர், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பின்னர் தங்களது குழந்தைக்கு பெயர் வைக்க இருக்கும் விருப்பங்களை தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர், பெண் குழந்தைக்கு அக்ஷயா ஸ்ரீ என பெயர் சூட்டி சக்கரை தண்ணீர் ஊட்டி வாழ்த்தினார்.

அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details