பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளார். இதனையொட்டி கடலூர் சாலை ஏ.எப்.டி மைதான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.20) கொட்டிய கனமழையால் அப்பகுதி சேறும் சகதியுமானது.
இதன் காரணமாக பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி லாஸ்பேட் ஹெலிபேட் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சிறப்பு உரை நிகழ்த்த இருக்கும் மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அக்கட்சி மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தொடங்கிவைத்தார்.