தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹெல்மெட் அபராததுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மனு - புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்துக்கு எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருப்பவர்களிடம் விதிக்கப்படும் அபராததுக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நிலை ஆளுநரிடம் அம்மாநில பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Puducherry BJP petition
ஹெல்மெட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நிலை ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு

By

Published : Feb 3, 2021, 10:20 PM IST

புதுச்சேரி பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் சாமிநாதன், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவரது மாளிகையில் இன்று (பிப்.3) சந்தித்து பேசினர்.

இதன் பின்னர் ஆளுநர் மாளிகை வெளியே செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், “பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கும் மற்றும் அதில் விடுபட்ட ஊழியர்களுக்கு பணி குறித்து தீர்வு காண வேண்டும். பொதுமக்களை துன்புறுத்தி ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கூடாது எனத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தாக தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக மனுவை பரிசீலித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்வதாக ஆளுநர் கிரண்பேடி உறுதியளித்தார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போராட்டத்தை ஜனநாயக நெறிமுறைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details