தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் வேட்புமனு தாக்கல்! - Puducherry Election 2021

புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், லாஸ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் அக்கட்சியின் வேட்பாளருமான சாமிநாதன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல்செய்தார்.

சாமிநாதன் லாஸ்பேட்
சாமிநாதன் லாஸ்பேட்

By

Published : Mar 19, 2021, 5:54 PM IST

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சாமிநாதன் இன்று லாஸ்பேட்டை தொகுதிக்கான தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமியிடம் இன்று (மார்ச் 19) வழங்கினார்.

பின்னர் சாரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார். கூட்டணியில் உள்ள பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம், சுமூக முடிவு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் வேட்புமனு தாக்கல்
நான் போட்டியிடும் லாஸ்பேட்டை தொகுதியில் சாலை வசதி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நெசவுத் தொழிலாளர் கோரிக்கை உள்ளிட்டவைகளை நிறைவேற்றப்படும் என்ற அவர், மூடப்பட்ட நியாயவிலைக் கடைகள் ஜூன் மாதம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details