புதுச்சேரி:மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குப்பை வரி, வீட்டுவரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி, இடுகாட்டு வரி போன்ற பல வரிகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது.