புதுச்சேரி:புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (நவம்பர் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையதளத்தில் நாளுக்கு நாள் விதவிதமான மோசடிகள் அதிகரித்துவருகின்றன. வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவது, நண்பர்கள் பட்டியலைப் பெற்று, அவர்களுக்குத் தவறான செய்திகளை அனுப்புவது எனப் பல மோசடித்தனங்கள் நடக்கின்றன.
கரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி என்பன போன்ற, மக்கள் அதிகம் படிக்க விரும்பும் தகவல்களைச் செய்திகளாக அனுப்பி, கீழ்க்கண்ட லிங்க்கை 'கிளிக்' செய்தால், முழுமையாகப் படிக்கலாம் என, ஒரு லிங்கை அனுப்புகின்றனர். அந்த லிங்கை அழுத்தினால், அவ்வளவுதான். நம் வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு தகவல்கள் போன்றவற்றை திருடிவிடுகின்றனர். எல்லாம் நொடி நேரத்தில் நடந்துவிடுகிறது.
98% தள்ளுபடி விளம்பரம்
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இப்போது மின்சார பைக், எலெக்ட்ரிக் சைக்கிள்களை குறிவைத்து இணையதளத்தில் மோசடிகள் அதிகரித்துள்ளன. இணையதளத்தில் எலெக்ட்ரிக் சைக்கிள் துணை உபகரணங்கள் பற்றி தேடுவோருக்கு குமார் அண்ட் குமாரி (kumarandkumari.com) என்ற இணையதளம் கண்ணில் படுகிறது.