புதுச்சேரியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தனியார்மயமாக்கலைக் கண்டித்து மின் துறை ஊழியர்கள் மூன்றாவது நாளாக பணிகளைப் புறக்கணித்துப் போராடுகிறார்கள்.
மின் ஊழியர்களின் போராட்டத்திற்கு முடிவுகட்ட அன்பழகன் எம்எல்ஏ கோரிக்கை - ஆளுநர் கிரண்பேடிக்கு எம்எல்ஏ அன்பழகன் கோரிக்கை
புதுச்சேரி: மின் துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் முடிவுகட்ட வேண்டும் என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
Puducherry ADMK MLA anbalagan press meet
இந்தப் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. ஊழியர்கள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். சட்டத்திற்கு விரோதமாகப் போராடும் மின் துறை ஊழியர்கள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சிறப்பு சட்டப்பேரவையை முதலமைச்சர் நாராயணசாமி கூட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.