புதுச்சேரியிலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதன் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாஸில் நேற்று (ஏப்ரல் 8) நடந்த அரசு அலுவலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி பேருந்துகளில் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்,