தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாற்று நபரால் செலுத்தப்பட்ட வாக்கு: கோபமடைந்த வாக்காளர் - Puducherry polling

புதுச்சேரி: வாக்களிக்கச் சென்ற வாக்களரின் வாக்கு, ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்காளரை சமாதானப்படுத்தி, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

"தனது வாக்கை மாற்றுநபர் போட்டுள்ளனர் யார் அனுமதித்தது" வாக்காளர் அலுவலர்களுடன் வாக்குவாதம்
"தனது வாக்கை மாற்றுநபர் போட்டுள்ளனர் யார் அனுமதித்தது" வாக்காளர் அலுவலர்களுடன் வாக்குவாதம்

By

Published : Apr 7, 2021, 9:20 AM IST

புதுச்சேரி, நெல்லிதோப்பு தொகுதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது மனைவி மணிமேகலை, மகள்கள் ஆகியோருடன் நேற்று (ஏப்ரல்.06) காலை அங்குள்ள பெரியர் நகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியில் வாக்களிக்க குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அங்கு வாக்குச்சாவடியில், அவரது பூத் சிலிப்பை காண்பித்துள்ளார். அதில், அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் கேள்விபட்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட குமார், "என்னுடைய வாக்கை மாற்றுநபர் செலுத்த யார் அனுமதித்தது" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிந்தவுடன் கண்காணிப்புக் கேமரா, வாக்குப்பதிவு நேரத்தின் அடிப்படையில் இது குறித்து கண்டயறிப்படும் என சமாதானப்படுத்தி, அவரை வாக்களிக்காமல் திருப்பி அனுப்பினர். குமார் தனது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தபோதும், மீண்டும் அதே பதில் வந்ததால் அவர் கோபமடைந்தார். எனவே, தேர்தல் அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தி, அங்கிருந்த உயர் தேர்தல் அலுவலரிடம் அவரை அனுப்பினர்.

இதையும் படிங்க: 'உதயநிதி சட்டையில் உதயசூரியன் - தகுதி நீக்க அதிமுக கோரிக்கை!'

ABOUT THE AUTHOR

...view details