தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியில் விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு - pudhucherry news in tamil

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

pudhucherry ulavarkarai constituency allocated for vck
புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியில் விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு

By

Published : Mar 15, 2021, 10:46 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15, திமுகவுக்கு 13, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 எனத் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு விசிகவுக்கு உழவர்கரை தொகுதி இன்று (மார்ச் 15) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், விசிகவின் முதன்மைச் செயலர் தேவபொழிலன் ஆகியோர் கையொப்பம் இட்டனர். இத்தொகுதியின் காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் சலசலப்பு!

ABOUT THE AUTHOR

...view details