தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி தற்காலிக சபாநாயகர்: ஓரிரு நாள்களில் பதவியேற்பு! - pudhucherry temporary speaker lakshmi narayanan

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட லட்சுமி நாராயணன், இன்னும் ஓரிரு நாளில் பதவியேற்கவுள்ளார்.

தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு
தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு

By

Published : May 23, 2021, 2:55 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக, ராஜ்பவன் தொகுதியின் என்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் அதற்கான உத்தரவை துணை நிலை ஆளுநர் பிறப்பித்தார்.

இந்த நிலையில், வரும் மே 24, 26 ஆகிய தேதிகளில் எதாவது ஒரு நாளில் சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி ஏற்கவுள்ளனர். தொடர்ந்து புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது.

நாளை (மே. 24) முதல் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'ராஜிவ் கொலை குற்றவாளிகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம்'- நாராயணசாமி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details