தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி: காவல்துறை வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை - latest pudhucherry news

காவல்துறை வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு வழங்கினார்.

pudhucherry govt give An Appointment on compassionate grounds to police heirs
காவல்துறை வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை

By

Published : Aug 27, 2021, 8:37 PM IST

புதுச்சேரி:காவல் துறையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து பணியின்போது மரணமடைந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணி நியமனம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின் குமார் காவல்துறை இயக்குநர் ரன்வீர் சிங் கிருஷ்ணிய்யா, உள்துறை சிறப்பு செயலர் ஆகியோர் கொண்ட குழு இதற்காக பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்தது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்.27) அரசின் அனுமதி பெற்று 12 பெண்கள் உள்பட 32 தகுதியான நபர்களுக்கு பணிநியமன ஆணையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

இதையும் படிங்க:'சொன்னதை செய்த முதலமைச்சர்' - தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு வேலை!

ABOUT THE AUTHOR

...view details