புதுச்சேரி: துணைநிலை ஆளுநருக்கு புதிய ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநருக்கு ஆலோசகர்கள் நியமனம்! - who is tamilisai advisors
புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புதிய ஆலோசகர்களை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![துணை நிலை ஆளுநருக்கு ஆலோசகர்கள் நியமனம்! தமிழிசை செளந்தரராஜன் ஆலோசகர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10788955-772-10788955-1614347623817.jpg)
தமிழிசை செளந்தரராஜன் ஆலோசகர்கள்
இது குறித்த அறிவிப்பை மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிப்ரவரி 18ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார்.