புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட குருசிகுப்பம், சின்னையாபுரம், வைதிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சேவை வழங்க 1954ஆம் ஆண்டு முதல் ஜிப்மர் நகர சுகாதார மையம் செஞ்சி சாலை, பட்டேல் சாலை சந்திப்பில் செயல்பட்டுவருகிறது.
இந்த மையத்தின் கட்டடம் பழுதானதால் 5 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (ஜூன். 14) நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், "கரோனா தொற்றை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது.