புதுச்சேரி: புதுச்சேரியில் கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையை அதிகரிக்கும் வகையில் ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனையை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். வடகிழக்குப் பருவமழையானது தற்போது தொடங்கியுள்ளதால், நகர, கிராமப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரிக்கும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதைக் கருத்தில்கொண்ட புதுச்சேரி அரசு கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையை அதிகரித்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் முன்னிலையில் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனர்.