தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகர்களின் கெட்டப்பில் புதுச்சேரி முதலமைச்சர் - Pudhucherry CM Birthday baner

புதுச்சேரி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அவரை பாகுபலி, சார்பட்டா, காலா படங்களில் நடித்த நடிகர்களாக சித்தரித்து அவரது ஆதரவாளர்கள் தட்டிகள் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர்களின் கெட்டப்பில் புதுச்சேரி முதலமைச்சர்
நடிகர்களின் கெட்டப்பில் புதுச்சேரி முதலமைச்சர்

By

Published : Aug 2, 2021, 4:44 PM IST

புதுச்சேரி:புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

அவரின் பிறந்தநாளையொட்டி ரங்கசாமியின் ஆதரவாளர்களும், நகரம், கிராமங்கள் எனப் பல்வேறு இடங்களில் வித்தியாசமான விளம்பர தட்டிகள் வைத்துள்ளனர்.

'சார்பட்டா' ரங்கசாமி

அவரை நடிகருக்கு இணையாக சித்தரித்து தட்டிகள் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ரங்கசாமி பிறந்தநாளின்போது அவரின் ஆதரவாளர்கள், ரங்கசாமியைப் புகழ்ந்து விதவிதமான நடிகர்கள் கெட்டப்பில் தட்டிகள் வைப்பது வழக்கம்.

பாகுபலி கெட்டப்பில் ரங்கசாமி

இந்த முறை அவரை பாகுபலி பிரபாஸ் போலவும், சமீபத்தில் வந்த திரைப்படமான 'சார்பட்டா' ஆர்யாவாகவும், 'காலா' ரஜினியாகவும் என பல கெட்டப்புகளில் ரங்கசாமிக்கு தட்டிகளை வைத்துள்ளனர், அவரது ஆதரவாளர்கள்.

நடுக்கடலில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தட்டி

ஒரு அபிமானி உச்சகட்டமாக சென்று, முதலமைச்சர் ரங்கசாமிக்கு நடுக்கடலில் தட்டிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: '’தங்கப் பதக்கம் வென்று வாருங்கள்’ - மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து'

ABOUT THE AUTHOR

...view details