புதுச்சேரி:மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள சாக்லேட் பேக்கரியில் 339 கிலோ எடை கொண்ட எஸ்பிபியின் சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் பேக்கரியில், சாக்லேட்டால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரிந்து வரும் செஃப் ராஜேந்திரன், ஆண்டுதோறும் சாக்லேட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த காலங்களில் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ஆகியோரின் உருவங்களை சாக்லேட்டுகளைக் கொண்டு தயாரித்துள்ளார்.