பிரதமர் மோடிக்கு புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையில் புதுச்சேரியில் நாள்தோறும் சுமார் 1000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியில் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. தொற்றுக்கு ஆளானவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தும் இல்லை.
பல்வேறு மாநிலங்களிலுள்ள மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ரெம்டெசிவிர் மருந்தை, மத்திய சுகாதாரத் துறை கொள்முதல்செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் ரெம்டெசிவிர் மருந்துக்கான ஒதுக்கீட்டை பெறும் மத்திய அரசின் பட்டியலில், புதுச்சேரி மாநிலம் விடப்பட்டுள்ளது.