புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வவுச்சர் அடிப்படையில் மாதம் 16 நாட்கள் வேலைக்கு ரூ.3,500 ஊதியம் பெற்று வந்தனர்.
மேலும், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மாதம் ரூ.10,000 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் இதுதொடர்பான கோப்புக்கு அனுமதி அளிக்க தலைமைச் செயலர் தடை செய்வதாகவும் அதற்கு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் உடந்தையாக இருப்பதாகக் கூறி நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி, 300க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.