தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திட்டிய தாத்தா பாட்டியை சிறைக்கு அனுப்ப சதி - கொலை செய்த பேரன் - பப்ஜி வெறியால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! - ஆறு வயது சிறுவனை கொலை செய்த இளைஞர்

பப்ஜி விளையாடியதற்காக திட்டிய தாத்தா பாட்டியை சிறைக்கு அனுப்புவதற்காக சதித்திட்டம் தீட்டிய பேரன், கொலை செய்ய துணிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

deoria
deoria

By

Published : Jul 8, 2022, 10:24 PM IST

Updated : Jul 9, 2022, 7:43 AM IST

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் ஹர்கௌலியைச் சேர்ந்த நரசிங் சர்மா( வயது 60) சிறுவர்களுக்கு தனிப்பட்ட முறையில் டியூசன் எடுப்பவர். இவரது பேரன் அர்ஜுன் சர்மா(18) பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என தெரிகிறது.

எப்போதும் பப்ஜி விளையாடி வந்ததால், அர்ஜுனை நரசிங் சர்மாவும், அவரது மனைவியும் கடுமையான திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சொந்த தாத்தா பாட்டியையே சிறைக்கு அனுப்ப சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, தாத்தாவிடம் டியூசன் படிக்கும் சங்கர் என்ற ஆறு வயது சிறுவனை, வாயில் ஃபெபிக்குயிக் கம்மை ஒட்ட வைத்து கடத்தி வந்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார், பிறகு உடலை கழிவறையில் ஒளித்து வைத்துள்ளார். பிறகு சிறுவனின் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவது போல் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், டியூசனில் இருந்து சங்கரை அழைத்துச் செல்ல அவரது தந்தை வந்தபோது, சிறுவன் வரவில்லை என கூறியுள்ளனர். அதே நேரம் நரசிங் சர்மாவின் வீட்டருகே அர்ஜுன் எழுதிய மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சங்கரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் அர்ஜுனிடம் விசாரணை நடத்தியதில், பயந்துபோன இளைஞர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தாத்தா பாட்டி மிகவும் திட்டியதால், அவர்களை சிக்க வைக்கவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அர்ஜுனை கைது செய்துள்ளனர். தாத்தா பாட்டி திட்டியதற்காக 18 வயது இளைஞர் செய்த இந்த காரியம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமர்நாத் குகை கோயில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!

Last Updated : Jul 9, 2022, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details