புதுச்சேரி: பள்ளிப் பருவங்களில் மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், மாணவர்களால் விளையாட்டில் கோலோச்ச முடிவதில்லை. இது ஒருபுறமிருக்க, மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் கூட பயிற்சி எடுத்துக் கொள்ள சில கிராமங்களில் மைதானம் இருப்பதில்லை.
அப்படிப்பட்ட பிரச்சினையைத்தான் புதுச்சேரி வீராம்பட்டினம் என்ற மீனவ கிராமம் வெகு ஆண்டுகளாகச் சந்தித்து வந்தது. இந்த நிலையை மாற்ற நினைத்தார் சிங்காரவேலர் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கோபு.
விளையாட்டு மைதானமாக மாறிய பூங்கா
இதற்காக அவர், வீராம்பட்டினத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதர் மண்டிக் கிடந்த பூங்கா ஒன்றைச் சீரமைத்து மைதானமாக்க முடிவு செய்தார். அம்மாநில நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து, இந்தப் பூங்காவை அரசு அனுமதியுடன் விளையாட்டு மைதானமாக மாற்றி உள்ளார். இவரது இந்த முயற்சியில், சிங்காரவேலர் அரசுப் பள்ளி, மீனவ பஞ்சாயத்தின் உதவியும் உறுதுணையாக இருந்தது.