தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி

ஹைதராபாத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Psycho
Psycho

By

Published : Oct 17, 2022, 9:45 PM IST

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தாநகரில் மளிகைக்கடை நடத்தி வந்தவர் நாகராஜு. இவரது மனைவி சுஜாதா தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இவர்களது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது.

பின்னர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, நாகராஜு தூக்கில் சடலமாக தொடங்கினார்.

அவரது மனைவியும், இரு குழந்தைகளும் கீழே சடலமாக கிடந்தனர். உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், நாகராஜு மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் மனைவியையும் குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்றும், மூன்று நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நாகராஜு சைக்கோ போல் நடந்து கொண்டு, மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சம்பள உயர்வு இல்லை... தொழிற்சாலை சிம்னி மீது ஏறி ஊழியர் தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details