கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த காவலர், சித்தராஜநாயகா(59) இன்று(மே 25) உயிரிழந்துள்ளார். இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் நேரடியாக மோதியவர்.
1993ஆம் ஆண்டு ராம்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியபோது வீரப்பன் இந்த காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது, வீரப்பன் துப்பாக்கியால் சுட்டதில் 4 குண்டுகள் சித்தராஜநாயகா மீது பாய்ந்துள்ளது.