தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலித் இளைஞரை சிறுநீர் குடிக்க சொன்ன விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்! - சிறுநீர் குடிக்க சொன்ன காவலர்

கர்நாடகா மாநிலம் முடிகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து, தலித் இளைஞர் ஒருவரை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுநீர் குடிக்க சொன்ன காவலர் பணியிடை நீக்கம்
சிறுநீர் குடிக்க சொன்ன காவலர் பணியிடை நீக்கம்

By

Published : May 24, 2021, 8:32 PM IST

சிக்மங்களூர் (கர்நாடகம்): காவல் நிலையத்தில் வைத்து தலித் இளைஞரை சிறுநீர் குடிக்க வற்புறுத்திய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கார்நாடகா மாநிலம் முடிகிரி தாலுகாவில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட இளைஞர் புனீத் காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதினார். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனை, காவல் துறைத் தலைவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக, காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details