ஹைதராபாத்:டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் அஞ்சலி சிங், கார் மோதி சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் ஏழு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதில் அஞ்சலி சிங் தோழி நிதி என்ற பெண்ணும் ஈடுபட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
அஞ்சலி சிங்கின் தோழி தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. விபத்து நடந்து 8 நாள்கள் கடந்த நிலையில், அவரது தோழி நிதி குறித்த தகவல்கள் மர்மமாக இருக்கிறது. இதுகுறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த அஞ்சலி சிங், தனது குடும்பத்தின் பொருளாதார ஆதாரமாக இருந்துள்ளார். இவரது இறப்பினால், இவர் குடும்பம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.