டெல்லி:உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் போலீசில் புகார் அளித்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை நீக்கக் கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினேஷ் போகாட், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளாமனா மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், உத்தரபிரதேச - ஹரியானா மாநில விவசாய சங்கத்தினர் என பலரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம் டெல்லி போலீசார் தங்களது போராட்டத்தை ஒடுக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி சென்று, மகளிர் மகாபஞ்சாயத்து நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்தனர். டெல்லி போலீசார் வீரர்களை இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாகும்வரை உண்ணாவிரதம்: