தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்! - Rising cooking gas prices

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 19, 2020, 10:32 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கடந்த ஒரு மாதத்தில் ஏற்றப்பட்ட சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சக காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதில், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், எதிர்ப்பு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி மத்திய அரசின் வேளாண் திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:குடிநீரில் கலக்கும் கரித்துகள்: எண்ணெய் ஆலையை முற்றுகையிட்ட மக்கள்

ABOUT THE AUTHOR

...view details