ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற மதக் கொடியேற்றும் நிகழ்வில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக மாறி, கல்வீச்சு தாக்குதல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இதில் 5 போலீசார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியதாகத் தெரிகிறது. இதுபோன்ற வதந்திகள் மேலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவையை முடக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.