தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் இந்த மாத இறுதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்!

டெல்லி: புதியவகை உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், டெல்லி அரசு ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. ஊரடங்கு நேரம் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை என அறிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு
டெல்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு

By

Published : Apr 6, 2021, 2:00 PM IST

கடந்த மூன்று வாரங்களில் புதியவகை உருமாறிய கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்து வருவதால், டெல்லி அரசு வரும் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை அமலில் இருக்கும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில், நேற்று (ஏப். 05) வரை பதிவாகியுள்ள கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,548ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 79 ஆயிரத்து 962ஆக உள்ளது. தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 5.54 விழுக்காடாக உள்ளது என்று டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியவகை உருமாறிய கரோனா

டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக 3,500க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தேசியத் தலைநகர் டெல்லியில் 4,033 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021ஆம் ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

ஏப்ரல் 3ஆம் தேதி நகரத்தில் 3,567 புதிய வழக்குகளும், ஏப்ரல் 2 ஆம் தேதி 3,594 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: 'தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கரோனா விதிகள் கட்டாயம்!'

ABOUT THE AUTHOR

...view details