நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், இதுவரை 610 காஷ்மீர் பண்டிட்களின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், எத்தனை காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த நித்யானந்த் ராய், "2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு வழங்கிய புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, சுமார் 2 ஆயிரத்து 105 புலம்பெயர்ந்தோர் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பியதாக" தெரிவித்தார்.
610 காஷ்மீர் பண்டிட்களின் சொத்துகள் மீட்பு - மத்திய அரசு - 610 காஷ்மீர் பண்டிட்களின் சொத்துகள் மீட்பு
610 காஷ்மீர் பண்டிட்களின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜயசபா
2019ஆம் ஆண்டு 3 காஷ்மீர் பண்டிட்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 2 ஆகவும், 2021ஆம் ஆண்டு 9 ஆகவும் இருந்தது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : பிரபல தொழிலதிபருக்கு நேர்ந்த கதி; வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு - சிசிடிவி காட்சி