ஹைதராபாத்: உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காதலர் தின வாரம் கடைபிடிக்கப்படுகிறது. காதலர் தின வாரத்தின் ஒவ்வொரு நாளும் பல்வேறு அம்சங்களை மையப்படுத்தி சாக்லேட் டே, கிஸ் டே ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்.11) காதல் ஜோடிகள் தங்களுக்குள் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், வாக்குறுதி அளிக்கும் நாளை கடைபிடிக்கின்றனர்.
உண்மையான காதலில் வாக்குறுதி அளிப்பதை சாதாரணமாக கருத முடியாது. காதலுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணையும் ஜோடிகளின் நம்பிக்கைக்கு அதுவே ஆதாரம். உணர்ச்சியில் வரும் வெளிப்பாடாக இல்லாமல் உண்மை, நேசம், உறுதி என அனைத்தும் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
"மாங்கல்யம் தந்துனானேன" என்ற மந்திரத்தை இந்து மத திருமணங்களில், மணமகன் தாலி அணிவிக்கும் போது, புரோகிதர் உச்சரிக்க கேட்டிருப்போம். அந்த மந்திரம் கூட மணமகன், தனது மனைவியாக வரும் பெண்ணுக்கு அளிக்கும் ஒருவகை வாக்குறுதி தான். "என் மனைவியாக, என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக நூறாண்டு காலம் வாழ்க" என்பது அதன் பொருள்.
அந்த வகையில் இந்து திருமணச் சடங்கு, 7 வகையான வாக்குறுதி அம்சங்களை பெற்றிருக்கிறது.
முதல் வாக்குறுதி:மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தை பேணி பாதுகாப்பேன் என்பது மணமகன் அளிக்கும் வாக்குறுதி. பதிலுக்கு, கணவர் வீட்டை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதுடன், சிறப்பாக உணவு சமைத்து பசியாற்றுவேன் என்பது மணமகள் அளிக்கும் வாக்குறுதி ஆகும்.
2ஆம் வாக்குறுதி: எந்த சூழ்நிலையிலும் உன்னை காப்பாற்றுவேன் என மணமகன் வாக்குறுதி அளிக்க, கணவனின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பேன் என உறுதியளிக்கிறார் மணமகள்.