தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிளப்ஹவுஸ் செயலி மூலம் பாகிஸ்தானின் தேசியக் கொடியை டிபி வைக்க ஊக்குவித்த விவகாரம்.. வழக்குப்பதிவு - பெங்களூரு போலீஸ்

சுதந்திர தினத்தின்போது கிளப்ஹவுஸ் செயலி மூலம் பாகிஸ்தானின் தேசியக் கொடியை டிபி வைக்கும்படி ஊக்குவித்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pro
Pro

By

Published : Aug 17, 2022, 9:27 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 14ஆம் தேதி, சமூக ஊடக செயலியான கிளப் ஹவுஸில், "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற முழக்கத்துடன் கூடிய கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அதில், சுதந்திர தினத்தையொட்டி, அனைவரும் பாகிஸ்தான் தேசிய கொடியை தங்கள் டிபியாக வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பிகேஹள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் பிரதாப் ரெட்டி கூறுகையில், "சிலர் டிபியில் பாகிஸ்தான் தேசிய கொடி வைக்கப்பட்டிருந்ததை கவனித்தோம். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. கிளப் ஹவுஸ் மூலம்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்களின் உண்மையான பெயருக்கு பதிலாக புனைப்பெயரை பயன்படுத்தியுள்ளனர். அதுகுறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து, விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெயர்

ABOUT THE AUTHOR

...view details