தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிர லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல் வீச்சு; பலர் கைது - மகாராஷ்ட்ரா லாரிகள் மீது கல் வீச்சு

கர்நாடக - மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் மகாராஷ்டிர லாரிகள் மீது கல் எறிந்த கர்நாடகா ரக்‌ஷணா வேடிகே அமைப்பின் மாநிலத் தலைவர் நாராயண கவுடா உட்பட நூற்றுக்கணக்கான அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ரா லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல் வீச்சு ; நாராயண கவுடா உட்பட பலர் கைது
மகாராஷ்ட்ரா லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல் வீச்சு ; நாராயண கவுடா உட்பட பலர் கைது

By

Published : Dec 6, 2022, 7:26 PM IST

பெலகவி(கர்நாடகா) : கர்நாடகா அமைப்புகளைச் சேர்ந்த பலர் இன்று(டிச.6) மகராஷ்டிர எல்லையிலுள்ள மாவட்டமான பெலகவி பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த லாரிகள் மீது கல் எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூனாவிலிருந்து பெங்களூரை நோக்கி வந்துகொண்டிருந்த அந்த லாரி மீது கல் எறிந்ததில் அதன் முன் கண்ணாடி, மற்றும் கதவுகள் சேதமடைந்தன. மகாராஷ்டிர அமைச்சர்களின் வருகைகளை எதிர்த்து வரும் இந்த கர்நாடக அமைப்புகள், மகாராஷ்டிர எகிகரன் சமிதியை (எம்.இ.எஸ்) எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினர் மகாராஷ்டிர லாரிகளின் மீது கற்களை எறிந்தும், அந்த லாரிகள் மீது பெயிண்ட் பூசியும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும், லாரி மீது ஏறி கன்னட கொடியை தூக்கிப் பறக்கவிட்டனர்.

கட்டுக்கடங்காத இந்த அமைப்பினரை கட்டுப்படுத்த காவல்துறை முயன்றபோது காவலர்களுக்கும் அமைப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டம் மேலும் தீவிரமானதால், கர்நாடகா ரக்‌ஷணா வேடிகே அமைப்பின் மாநிலத் தலைவர் நாராயண கவுடா உட்பட நூற்றுக்கும் மேலான போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் எல்லையில் குவியும் பாகிஸ்தான் ஹெராயின் டிரோன்கள்

ABOUT THE AUTHOR

...view details