இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
'பெருந்தொற்று காலத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் தேவைதானா...'
புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலயில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கதில், ”புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு 20,000 கோடி ரூபாய் செலவாகிறது. இந்தத் தொகையில் 62 கோடி தடுப்பூசிகள் செலுத்தலாம். அல்லது 22 கோடி ரெம்டெசிவிர் மருத்து வாங்கலாம். 10 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூன்று கோடி வாங்கலாம். 12,000 படுக்கைகள் கொண்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டலாம்.
இப்படியிருக்க, தற்போதைய சூழலில் புதிய கட்டடம் தேவைதானா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.