உத்தரகாண்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் தீரத் சிங் ராவத், பெண்களின் ஆடையை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "ஒருமுறை நான் விமானத்தில் பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த பெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.
என்ன மாதிரியான நடத்தை இது? கிழிந்த ஜீன்ஸ் அணிவது சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது. இது பெற்றோர்களால் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட மோசமான முன்மாதிரி. பெண்கள் ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் காட்டுகிறார்கள்.
இது நல்லதா? இவை அனைத்தும், மேற்கத்தியமயமாக்கலின் ஒரு பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற பெண்கள் சமூகத்திற்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.