தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி மக்கள் தொகையை அறிய முடியும் - பிரியங்கா காந்தி! - மத்திய பிர்தேசத்தில் பிரியங்கா காந்தி

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி வலியுறுத்தும் போதெல்லாம் மத்திய அரசு மவுனம் காப்பதாகவும் அதற்கு பதிலாக வேறு பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் அந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Priyanka Gandhi
Priyanka Gandhi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 4:47 PM IST

Updated : Oct 28, 2023, 6:39 PM IST

தாமோ : சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியமானது என்றும் அதன் மூலமே ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் உள்ள மக்கள் தொகை குறித்த உண்மைத் தன்மை தெரியவரும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசம் மாநில சட்டப் பேரவைக்கு நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்ட சபையில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்படுகின்றன. வரும் 30ஆம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் தாமோ பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பின் அர்த்தம் என்ன என்றும், ஓபிசி, எஸ்.டி, எஸ்.சி பிரிவுகளில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் அரசு ஓபிசி, எஸ்.டி, எஸ்.டி பிரிவுகளில் உள்ள மக்களின் சரியான எண்ணிக்கையை அறிந்து இருக்கவில்லை என்றும், அப்படி இருக்கையில் அவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் மாநிலத்தில் 84 சதவீதம் பேர் ஓபிசி மற்றும் தலீத் பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது தெரியவந்ததாக பிரியங்கா காந்தி கூறினார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி வலியுறுத்தும் போதெல்லாம் மத்திய அரசு மவுனம் காப்பதாகவும் அதற்கு பதிலாக வேறு பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் பிரியங்கா தெரிவித்தார்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம் குறித்து பேசிய பிரியங்கா காந்தி, மத்திய அரசு முதலில் பொதுத் துறை நிறுவனங்களை மூடி பின்னர் அதை தன் நண்பர்களுக்கு விற்றதாக கூறினார். பண மதிப்பிழப்பு அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி கரோனா காலத்தில் அறிமுகப்படுத்தியதாகவும் இவை அணைத்தும் நாட்டு மக்களின் பொருளாதார முதுகெலும்பை முறித்ததாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் வெறும் 21 வேலைவாய்ப்புகளை மட்டுமே அரசு ஏற்படுத்தி உள்ளதாகவும், மருத்துவர்கள், காவல் துறை உள்பட பல்வேறு துறைகளில் பெரிய அளவிலான ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். போதிய வளர்ச்சிக்கான பணிகள் முன்னெடுக்கப்படாததன் காரணத்தால் பண்டல்கண்ட் பகுதியில் உள்ள மக்கள் வேலை மற்றும் வாழ்வாதாரம் தேடி மற்ர பகுதிகளுக்கு புலம்பெயரும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க :ETV Exclusive: ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு விவகாரம் என்ஐஏ-க்கு மாற்ற உள்ளதாக பிரத்யேக தகவல்!

Last Updated : Oct 28, 2023, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details