வசந்த பஞ்சமி, இந்தியாவில் வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கிறது. வசந்த பஞ்சமி நாளான இன்றைய தினம், புனித நதிகளில் நீராடி மக்கள் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். குறிப்பாக, வட இந்தியாவில் இந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில், வசந்த பஞ்சமி குறிப்பாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "வசந்த பஞ்சமியின்போது என் பாட்டி இந்திரா ஜி, பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு மஞ்சள் கைக்குட்டைகளை என் பையிலும், எனது சகோதரர் ராகுல் காந்தியின் பையிலும் வைப்பார். தற்போதும், எனது அம்மா சோனியா காந்தி, மஞ்சள் பூக்களால் வீட்டை அலங்கரிக்கிறார். கல்வி கடவுளான சரஸ்வதி தேவி அனைவருக்கும் நல்லது செய்யட்டும். உங்கள் அனைவருக்கும் வசந்த பஞ்சமி வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:திஷா ரவி கைதுக்கு எதிராக டெல்லி போலீசுக்கு நோட்டீஸ்- பெண்கள் ஆணையம் நடவடிக்கை