தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’சைக்கிள் பெண்’ ஜோதியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு: உதவிக்கரம் நீட்டிய பிரியங்கா காந்தி! - சைக்கிள் பெண் ஜோதியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

கடந்த ஆண்டின் முதல் கரோனா அலையின்போது, தனது உடல் நலம் குன்றிய தந்தையை தன் சைக்கிள் பின் இருக்கையில் அமர்த்திக்கொண்டு, குருக்ராம் முதல் தர்பங்கா வரை ஆறு நாள்களில் 1,200 கிலோமீட்டரை ஜோதி கடந்தார். ஜோதியின் இந்தத் துணிச்சலான செயல், நாட்டின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

’சைக்கிள் பெண்’ ஜோதியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு
’சைக்கிள் பெண்’ ஜோதியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

By

Published : Jun 4, 2021, 9:09 PM IST

பாட்னா (பிகார்): பிரபல 'சைக்கிள் பெண்' ஜோதி குமாரியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கரோனா காலக்கட்டத்தின்போது, தனது உடல் நலம் குன்றிய தந்தையை பின் இருக்கையில் அமர்த்திக்கொண்டு குருக்ராம் முதல் தர்பங்கா வரை ஆறு நாள்களில் 1,200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிச் சென்றதை அடுத்து அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

தந்தையுடன் பிகாருக்கு சைக்கிளில் 1200 கி.மீ., பயணித்த ஜோதி

உதவிக்கரம் நீட்டிய பிரியங்கா காந்தி

தற்போது ஜோதியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கல்விக்கான முழு செலவு உள்பட, குடும்ப செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். முன்னதாக பிரியங்காவை நேரில் சந்திக்க தனது விருப்பத்தை ஜோதி வெளிப்படுத்திய நிலையில், ஜோதி இல்லத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் மஷ்கூர் அகமது உஸ்மானி, பிரியங்கா தனிப்பட்ட முறையில் எழுதிய இரங்கல் கடிதத்தை ஜோதியிடம் வழங்கினார்.

மஷ்கூர் அஹமது உஸ்மானியுடன் ஜோதி

ஜோதியின் தந்தை மோகன் பாஸ்வான் சென்ற ஆண்டு கரோனா பரவலுக்கு முன்னர் குருகிராமில் இ-ரிக்‌ஷா ஒன்றை ஓட்டி வந்தார். பின்னர் கட்டுக்கடங்காத கரோனா பரவல் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களான இந்தத் தந்தையும் மகளும், தங்களது சொந்த ஊரான பீகார் மாநிலம், தர்பாங்காவை சைக்கிளில் ஆறு நாள்கள் பயணித்து சென்றடைந்தனர்.

ஜோதிக்கு குவிந்த விருதுகள்

தன் தந்தையை பின் இருக்கையில் அமர்த்திக் கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்ற ஜோதியின் துணிச்சலைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான ’பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புராஸ்கர் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கிய தருணத்தில் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஜோதியின் செயலை வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து பீகார் மாநில அரசு ஜோதியை போதைப்பொருள்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் தூதராகவும் ஜோதியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details