காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது சகோதரர் ராகுல் காந்தியைப் பிரசவம் பார்த்த மருத்துவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
'என்னையும், ராகுலையும் பிரசவித்த மருத்துவர் தற்போது இல்லை' கவலையில் பிரியங்கா ட்வீட்! - பிரியங்கா காந்தி ட்வீட்
தன்னை பிரசவித்த மருத்துவரின் மறைவுக்குப் பிரியங்கா காந்தி கவலையுடன் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரியங்கா
அந்தப் பதிவில், "கங்கா ராம் மருத்துவமனை மருத்துவரான எஸ்.கே. பண்டாரி, என்னை, எனது தம்பி, எனது மகன், எனது மகள் ஆகியோரைப் பிரசவித்த மருத்துவர். இவர் உயிரிழந்துவிட்டார். 70 வயதுக்கு மேலும் மருத்துவமனைக்குத் தாமாக வாகனத்தில் செல்பவர் இவர். சிறந்த தலைமை பண்பு கொண்ட இவர் மனித நேயவாதி. மதிப்பும், மரியாதையும் கொண்ட நல்ல நண்பரை இழந்துள்ளேன்" என, அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆக்ஸிஜன், தடுப்பூசியுடன் பிரதமரும் தொலைந்துவிட்டார் - ராகுல் காந்தி