டெல்லி:காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்திலுள்ள கரும்பு உழவர்களுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாஜக அரசிற்குப் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது. பிரதமருக்காக சிறப்பு விமானம் வாங்குவதற்காக 16 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள கரும்பு உழவர்களுக்கு அளிக்க வேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை திருப்பி அளிக்க பணம் இல்லையா? 2017ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை கரும்பின் விலை ஏற்றப்படவில்லை. இந்த பாஜக தலைமையிலான அரசு பெருமுதலாளிகளுக்காக மட்டுமே சிந்திக்கக்கூடியதாக உள்ளது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.