ராய்ப்பூர்(சத்தீஸ்கர்): காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று (அக்.30) கூறும் போது, சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாலை விபத்திற்கு இலவச சிகிச்சை புதிய மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட 8 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் சட்டமன்றப் பகுதியில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா 8 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதில்,
இதையும் படிங்க:பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? - மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!
- பெண்களுக்கான மஹ்தாரி நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
- சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள 49.63 லட்சம் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரில் 200 யூனிட்டு குறைவாகப் பயன்படுத்தும் 43,000 மின் கட்டண செலுத்தும் நுகர்வோருக்குக் கட்டணங்கள் கிடையாது எனவும் மீதம் உள்ளவர்கள் 200 யூனிட்டு வரை மின்சாரம் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் அனைத்து சக்ஷம் யோஜனா திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் இதனால் பல பெண்கள் பயன் அடைவார்கள்.
- 6,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சுவாமி ஆத்மானந்த ஆங்கிலம் மற்றும் இந்தி வழி பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
- முதலமைச்சரின் சிறப்புச் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
- திவரா பருப்புகள் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து ஆதரவு விலைகளில் பருப்புகள் கொள்முதல் செய்யப்படும்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் குறைந்தது 700 புதிய கிராமப்புற தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- 2018ஆம் ஆண்டு வரை உள்ள போக்குவரத்து வணிகத்துடன் தொடர்புடைய 6600 வணிக வாகன உரிமையாளர்களின் வாகன கடன் ரூ.726 கோடி தள்ளுபடி செய்யப்படும். போன்ற 8 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
இதையும் படிங்க:காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை!